மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தற்போதுள்ள மாகாண சபைகளுக்குப் பதிலாக அமைய வாய்ப்புள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டின் கிராமப்புற மக்களுடன் இணைந்து செயற்படுவதில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
கூடுதல் செலவுகள் இன்றி, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் சபைகள் இயங்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த அழைப்பிற்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தயார் என தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது அரச தலைவருக்கு அறிவித்தார்.