ஈரானில் செப்டம்பர் 16 அன்று மஹ்சா அமினி அறநெறிப் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த போராட்டங்களில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரானின் உயர் பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
“இந்தப் பெண்ணின் மரணத்தால் நாட்டில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னிடம் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இல்லை, ஆனால் இந்த சம்பவத்திலிருந்து இந்த நாட்டில் 300 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ”என்று புரட்சிகர காவலர்களின் விமானப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அமிராலி ஹாஜிசாதே கூறினார்.
இந்த எண்ணிக்கையில் டஜன் கணக்கான பொலிஸ், இராணுவம் மற்றும் போராட்டக்காரர்கள் உள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது ஒஸ்லோவை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழுவால் வெளியிடப்பட்ட “ஈரானில் எதிர்ப்புக்களை அடக்கியதில் கொல்லப்பட்டவர்கள்” என்ற எண்ணிக்கையுடன் மிக நெருக்கமாக உள்ளது.