நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஒப் 16க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிற்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி.
டோஹாவின் ஸ்டேடியம் 974 இல் நடந்த குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் பலமாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும் தீவிரமாக இருந்தது. 13 ஷாட்களை ஆடி இருந்தது பிரேசில். அதில் 3 ஷாட்கள் டார்கெட்டில் விழுந்தன.
பிரேசில் அணியின் கேஸ்மிரோ, 83வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். அதன் பிறகும் இரண்டாவது கோலை பதிவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டது பிரேசில் அணி. ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது பிரேசில்.
இதேவேளை, செர்பியாவிற்பு எதிராக 2 கோல்களை அடித்து விருந்து படைதத ரிச்சர்லிசன் மீதே நேற்று அனைவரது கவனமும் இருந்தது. நெய்மர் இல்லாத பிரேசில் அணியை ரிச்சர்லிசன் காப்பாற்றுவார் என எதிர்பார்த்திருந்தனர். எனினும், நேற்று ரிச்சர்லிசன் சோபிக்கவில்லை. அவர் 73 நிமிடங்கள் மட்டுமே ஆடினார். பின்னர் கப்ரியல் ஜீசஸ் பதில் வீரராக களமிறக்கப்பட்டார்.
மாற்றப்படுவதற்கு முன்பு 73 நிமிடங்களில், ரிச்சர்லிசன் 17 டச்களை மட்டுமே நிர்வகித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, பிரான்ஸ் அணிக்கு அடுத்ததாக, ரவுண்ட் ஒப் 16க்கு முன்னேறியது பிரேசில்.
வரும் 3ஆம் திகதி கமரூன் அணியை எதிர்கொள்கிறது பிரேசில்.
போர்த்துக்கல்லும் முன்னேறியது
நேற்று உருகுவேக்கு எதிராக ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்ற போர்த்துக்கல்லும், ரவுண்ட் ஒப் 16 சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 53, 93வது நிமிடங்களில் போர்த்துக்கல்லின் புருனோ பெர்னாண்டஸ் கோலடித்தார். அவர் இரண்டாவது கோல் அடித்த போது, அந்த கோல் யாருடையது என்ற சர்ச்சை உருவானது. அவர் கோல் கம்பத்திற்குள் பந்தை உதைந்த போத, கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை டச் செய்ய முனைந்தார். அவர் டச் செய்ததாக நினைத்து கோலடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனினும், தொழில்நுட்ப உதவியுடன், அந்த கோல் புருனோ பெர்னாண்டஸிற்கு வழங்கப்பட்டது.
Ronaldo does not touch that ball. #FIFAWorldCupQatar2022 #Por #Uru pic.twitter.com/eHqtndFBK0
— Gilly (@MrGisepi92) November 28, 2022
இந்த போட்டியில் ஆடியபோது, போர்த்துக்கல் வீரர் பெப்பே வுக்கு 39 வயது மற்றும் 275 நாட்கள் வயது. FIFA உலகக் கோப்பையில் ஐரோப்பிய அணிக்காக மிகவும் வயதான அவுட்பீல்ட் வீரர் ஆனார்.
இதேவேளை, இதுவரையான உலகக்கோப்பை வரலற்றில் 35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வீரர்கள் அதிகமான ஆடும் உலகக்கோப்பையும் இதுதான். பெப்பே (39), கிறிஸ்டியானோ ரொனால்டோ (37), டியாகோ காடின் (36), லூயிஸ் சுவாரஸ் (35) மற்றும் எடின்சன் கவானி (35) ஆகியோர் அதிக வயதான வீரர்கள்.