24.9 C
Jaffna
January 29, 2023
மலையகம்

‘ஒரு ரௌடிக்கு உண்டான மரியாதையை எனக்கு தரவில்லை… அதனால் தீவைத்தேன்’: 9ஏ சித்தியடைந்த மாணவனை கொளுத்திய கொடூரன் ‘பகீர்’ வாக்குமூலம்!

இவ்வருட சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்ற மாணவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய கொடூரன் கைது செய்துள்ளான்.

அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

26 வயதான நபரை பொலிசார் கைது செய்த போது, அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது.

கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர் ஒருவர், இம்முறை  க.பொத.த சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளை பெற்றிருந்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக தனது பாட்டியின் வீட்டிற்கு, தந்தையுடன் சென்றிருந்தார். வீடு திரும்பும் வழியில் மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீமூட்டப்பட்டது.

தீமூட்டிய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைதாகினார்.

பிரதேசத்தில் அறியப்பட்ட குற்றவாளியான அந்த நபர், வீதியில் நின்ற போது, தந்தையும் மகனும் சென்றதாகவும், அவர்களிடம் அந்த நபர் தகவல் கேட்க, தந்தையும் மகனும் பேசாமல் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர் சிறுவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, மாணவரின் தலைக்குக் கீழே உள்ள பகுதி தீக்காயங்களுக்கு உள்ளதான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பிட்டிய புனித கிளெமென்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே பாதிக்கப்பட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபர் மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கும்பலை உருவாக்கி அப்பகுதி மக்களை பயமுறுத்தி கப்பம், கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடிதம் எழுதி வைத்து விட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த முதியவர்

Pagetamil

பொன்னாடை வேண்டாம், பூமாலை வேண்டாம், பொலித்தீன் அலங்காரமும் வேண்டாம்!

Pagetamil

தேயிலை தொழிற்சாலை தீயில் கருகியது!

Pagetamil

சொந்த மகளை வல்லுறவிற்குள்ளாக்கிய தந்தைக்கு 48 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தேனிலவு முடிந்ததும் ஒரு போத்தல் பியர் அருந்தியதால் கணவனை அடித்து, திருமண உறவை முறித்த புது மனைவி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!