30.5 C
Jaffna
April 24, 2025
Pagetamil
குற்றம்

பேஸ்புக் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் கைது!

வெலிகம பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 9 இளைஞர்களை கைது செய்துள்ளதாக மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சட்டவிரோத போதைப்பொருள், கஞ்சா மற்றும் இனந்தெரியாத போதைப்பொருளுடன் 08 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் 21, 24, 27, 35, 22, 17 வயதுடைய பெலியத்த, சியாவலல, உடுகாவ – தெலிஜ்ஜவில, கனங்கே கடவிடிய, மிரிஸ்ஸ, பெலான மற்றும் ரணால ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து பலர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

பெற்ற மகளை சீரழித்த காமுகனுக்கு வலைவீச்சு

Pagetamil

கணவரை பிரிந்த பின் இளம்பெண்ணுக்கு மற்றொரு காதல்: தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று காதலன் வெறிச்செயல்!

Pagetamil

11 வயது சிறுமியை குதறிய 75 வயது காமுகத் தாத்தா!

Pagetamil

தந்தையை அடித்துக் கொன்ற மகன்

Pagetamil

யாழில் வில்லங்க சம்பவம்: பிரான்ஸ் மாப்பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற ஜிம் சென்ற யுவதி… மாஸ்டருன் எஸ்கேப்; பேஸ்புக்கில் பகிரப்படும் அந்தரங்க படங்கள்!

Pagetamil

Leave a Comment