24.9 C
Jaffna
January 29, 2023
கிழக்கு

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி: 5 பேர் காயம்!

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த நல்லராசா நேசராசா (46) ஆறு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்ற நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதியதில் உளவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கார் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காரில் வந்தவர்கள் களுதாவளை ஆலயத்திற்கு பூஜை ஒன்றுக்கு வந்துள்ளார்கள் என தெரியவருகிறது..

காரின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்த சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிசார் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் காணித் தகராறு மோதலில் 2 பேர் பலி

Pagetamil

மட்டக்களப்பில் சுதந்திரதினத்திற்கு எதிரான சுவரொட்டிகள்

Pagetamil

மாம்பழம் சின்னத்தை பிரபலப்படுத்த பாகிஸ்தானிலிருந்து சுவையான மாம்பழங்களை இறக்குமதி செய்யவுள்ள கட்சி!

Pagetamil

அரசின் அசாதாரண வரிச் சுமையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

Pagetamil

மட்டக்களப்பு ‘நாக கன்னி’ கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!