நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது சவுதி அரேபியா. 2-1 என அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை அந்த அணியின் கப்டன் மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு முன்பாக உற்சாகத்தில் ஆர்ப்பரித்து எழுந்தார். இருந்தாலும் அது ஆட்டத்தின் பிற்பாதியில் நீடிக்கவில்லை. இந்த போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை தழுவியுள்ளது.
Leo Messi’s penalty again Saudi Arabia from the stands! #FIFAWorldCup
— Leo Messi 🔟 (@WeAreMessi) November 22, 2022
குரூப் ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் லுசைல் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மெஸ்ஸி கோல் பதிவு செய்து அசத்தினார்.
The Arabic commentary is just on another level 🇸🇦♥️#ARGKSA #Qatar2022 #FIFAWorldCup pic.twitter.com/rVuxbJsh4s
— Farid Khan (@_FaridKhan) November 22, 2022
இதன் மூலம் 2006, 2014, 2018 மற்றும் 2022 என நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் பதிவு செய்தவர் என்ற சாதனையை எட்டியுள்ளார் மெஸ்ஸி. இதற்கு முன்னர் பீலே, சீலர், க்ளோஸ் மற்றும் ரொனால்டோ போன்ற வீரர்கள் நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் இந்த சாதனையை எட்டியுள்ளனர்.
The reactions of the #SaudiArabia 🇸🇦 fans at the House of Saudi Fan zone in the #FIFAWorldCupQatar2022. #FIFAWorldCup2022 #Qatar2022 pic.twitter.com/gQhgD8TFGR
— Alkass Digital (@alkass_digital) November 22, 2022
இந்த போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. அந்த அணி சில முறை பந்தை வலைக்குள் தள்ளி இருந்தது. ஆனால் அவை ஓஃப் சைட் என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் 48 மற்றும் 53வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை பதிவு செய்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது சவுதி அரேபியா.
அதன் பிறகு அர்ஜென்டினா வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கோல் பதிவு செய்ய முடியவில்லை. இது ஆட்ட நேர முடிவு, எக்ஸ்ட்ரா டைம் முடிவு வரை சென்றிருந்தது.
இந்த போட்டிக்கு முன்னர் வரை தொடர்ச்சியாக 36 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த அர்ஜென்டினா இதில் தோல்வியை தழுவி உள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றானதாக கருதப்படும் அர்ஜென்டினாவுக்கு இது அதிர்ச்சிகரமான தோல்வியாகும்.
சவுதி அரேபியா 2-1 என இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் கோல் கீப்பர் சிறப்பாக பந்தை தடுத்திருந்தார்.
Argentina trying to score on the Saudi Arabia keeper pic.twitter.com/lRAlaUFXEg
— LakeShowYo (@LakeShowYo) November 22, 2022