26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இந்தியா

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய சம்பவம்: 5 மாதமாக பிரிட்ஜிலிருந்த காதலியின் உடல்!

காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட காதலியின் உடல் 35 துண்டங்களாக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட வழக்கில் புதிதுபுதிதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அப்தாப் அமீன் பூனாவாலா (28) ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் டெல்லியில் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த மே 18ஆம் திகதி ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தார். ஷ்ரத்தாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்தாப்பை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக புதிய தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன.

ப்ரிட்ஜில் வைத்திருந்த ஷ்ரத்தா உடல் பாகங்களை வீசியெறிந்த பகுதிக்கு அப்தாபை போலீஸார் அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷ்ரத்தாவின்உடலின் 13 பாகங்கள் கிடைத்துள்ளன. இதில் பெரும்பகுதி ஷ்ரத்தாவின் எலும்புகள் என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவரது தலையை, அப்தாப் எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தெற்கு டெல்லியின் மஹரவுலி உள்ளிட்டபல்வேறு பகுதிகள், ஹரியாணாவின் குருகிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அப்தாபை போலீஸார் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஷ்ரத்தாவின் உடல் பகுதிகள் கிடைக்கின்றனவா என்றும் போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும் அப்தாபின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கூரிய ஆயுதத்தையும் போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஆயுதத்தால்தான் ஷ்ரத்தாவை அவர் வெட்டியுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

அப்தாப் டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சாலையில் பையை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் அக்டோபர் 18 ஆம் திகதியன்று பதிவாகியுள்ளன. அஃப்தாப் வைத்துள்ள பையில் ஷ்ரத்தாவின் உடல் பகுதிகள் இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது. இது உறுதியானால், ஷ்ரத்தா கொல்லப்பட்ட பின்னர், அவரது உடல் உறுப்புக்கள் வீட்டு ஃபிரிட்ஜில் இருந்தது உறுதியாகும்.

தினம் தினம் சித்திரவதை

ஷ்ரத்தா கொல்லப்பட்ட பின்னர்தான், அவர் காதலனினால் சித்திரவதைப்பட்ட பல தகவல்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஷ்ரத்தாவின் நண்பர்கள் அவற்றை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே, மும்பையில் இருந்தபோது 2020 நவம்பர் 24ஆம் திகதி ஷ்ரத்தாவை, அப்தாப் தாக்கியுள்ளார். இதனால் காயத்துடன் மருத்துவமனையில் ஷ்ரத்தா சிகிச்சை பெற்ற புகைப்படத்தை அவரது தோழி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஷ்ரத்தாவின் கண்கள், மூக்கு மற்றும் கன்னங்களைச் சுற்றிலும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு, 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

ஒரு முன்னணி நாளிதழிடம் பேசிய ஷ்ரத்தா வாக்கரின் தோழி, பல்வேறு தகவல்களை விவரித்தார். ஷ்ரத்தா தனது காதலனுடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புவதாக தோழியிடம் தெரிவித்துள்ளார். காதலன் தன்னை மனரீதியாக சித்திரவதை செய்து உடல் ரீதியாக தாக்கியதால் இந்த முடிவிற்கு வந்திருந்தார். எனினும், துரதிர்ஷ்டவசமாக, அப்தாப், ஷ்ரத்தாவை “எமோஷனல் பிளாக்மெயில்” செய்ததால், ஷ்ரத்தாவிற்கு வேறு வழி இல்லாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.

ஷ்ரத்தா பிரிந்து போய்விட்டால், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அப்தாப் மிரட்டினான்.

ஷ்ரத்தா உயிருக்கு பயப்படுவதாக அவரது மற்றொரு நண்பர் ரஜத் கூறினார். “அவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். அன்றிரவு அவளை எங்காவது அழைத்துச் செல்லுமாறு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும் அளவுக்கு சண்டை ஏற்பட்டது. அன்று இரவு அப்தாப் உடன் வாழ்ந்தால், அவன் அவளைக் கொன்றுவிடுவான் என்று அவள் சொன்னாள்,” என்று ரஜத் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 இல் ஷ்ரத்தாவை, அப்தாப் கொடூரமாக தாக்கிய தகவலறிந்து, நண்பர்கள் தலையிட்டு அவரைக் காப்பாற்ற வந்தdர்.  “அவளுடைய கழுத்து, மேல் மார்பு மற்றும் மூக்கில் காயங்கள் இருப்பதை நான் கண்டேன். அப்போதும் கூட, நாங்கள் போலீஸ் புகார் செய்வோம் என்று அவரை எச்சரித்திருந்தோம், ”என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரது தோழியை மேற்கோள் காட்டியுள்ளது.

அப்தாபிற்கு பல பெண்களுடன் சகவாசம் இருப்பது தெரிய வந்ததும், தன்னை முறைப்படி திருமணம் செய்யும்படி ஷ்ரத்தா வற்புறுத்த ஆரம்பித்த பின்னர் அவர்களிற்குள் தகராறு ஏற்பட்டது.

ஷ்ரத்தா வாக்கருடன் லைவ்-இன் பார்ட்னருடன் வாழ்ந்தபோதே, அப்தாபிற்கு 20க்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்தாப் தனது தோழிகள் என்று கூறப்படும் அனைவரையும் ‘பம்பிள்’ டேட்டிங் செயலியில் சந்தித்ததாக கூறப்படுகிறது. 28 வயதான அவர் தனது தோழிகள் சிலருடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி அப்தாப் தனது தோழிகளுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஷ்ரத்தா வாக்கருடன் உறவில் இருந்தபோது அப்தாபின் பல தோழிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷ்ரதாவை கொன்ற பின்னர், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.54 ஆயிரம் பணத்தை எடுத்து, 300 லீற்றர் ஃபிரிட்ஜ் வாங்கி, அதற்குள் உடலை 35 பாகங்களாக வெட்டி வைத்துள்ளார்.

மே 18, 2022 அன்று, அப்தாப் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக  ஷ்ரத்தா குற்றம்சாட்டியதையடுத்து அவர்களிற்குள் சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது. சண்டை தீவிரமடைந்தபோது, ​​​​அப்தாப் ஷ்ரத்தாவை அடித்தார். ஷ்ரத்தா மயக்கமடைந்த பிறகு, அப்தாப், அவரது மார்பில் அமர்ந்து கழுத்தை நெரித்து கொன்றான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

அட்டபகொல்லில் 1 வயது குழந்தையின் உயிரைப் பலியெடுத்த விபத்து

east tamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

Leave a Comment