குற்றம்

3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (18) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். குறித்த சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியாவில் உறவினர் வீட்டில் வங்கி அட்டை திருடி நகை வாங்கிய கிளிநொச்சி யுவதி கைது!

Pagetamil

யாழில் ஹெரோயினுடன் 21 வயதான இளம் யுவதி கைது!

Pagetamil

மனைவியையும், காதலனையும் கத்தியால் குத்திய கணவன் கைது!

Pagetamil

பகல் பராமரிப்பு நிலையத்தில் 4 வயது சிறுமியிடம் கைவரிசை காட்டிய 74 வயது முதியவர் கைது!

Pagetamil

மன்னார் முச்சக்கர வண்டி சாரதி சங்க தலைவர் மீது தாக்குதல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!