இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு 150,000 டொலர் பிணை வழங்குவதற்கும் அவர் நாட்டை விட்டு வெளியேறாததை உறுதிசெய்வதற்காக கண்காணிப்பு வளையல் அணிவதற்கும் ஒப்புக்கொண்டதையடுத்து, அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில், வியாழன் அன்று இரண்டாவது பிணை மனுவின் போது, தனுஷ்கவினால் பாதிக்கப்பட்டவர், இலங்கையில் உள்ள ரசிகர்களால் பல சமூக ஊடக இடுகைகளில் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
தனுஷ்க குணதிலவிற்காக இன்று சட்டத்தரணி முருகன் தங்கராஜ் ஆஜரானார். குணதிலக வீடியோ இணைப்பு மூலம் மன்றில் முற்படுத்தப்பட்டார்.
குணதிலக மீது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தங்கராஜ் தனது வாடிக்கையாளருக்கு செயற்கைக்கோள் கண்காணிப்பு அங்கிளை அணியுமாறும், 150,000 டொலர் பிணை தொகையை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், குணதிலக அந்தப் பெண்ணுடன் சம்மதத்துடனேயே பாலியல் உறவு கொண்டார் என்று வாதிட்டார்.
குணதிலக தனது பிணையை மீறினால், ‘நிச்சயமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது, வர் இலங்கை அரசாங்கத்துடன் சிக்கலில் இருப்பார்’ என்று தங்கராஜ் கூறினார்.
பாஸ்போர்ட் இல்லாமல் ஆஸ்திரேலியாவை விட்டு எப்படி தப்பிச் செல்ல முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மாஜிஸ்திரேட் ஜேனட் வால்கிஸ்ட் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார், அவர் தினமும் காவல்துறையில் கையொப்பமிட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்லக்கூடாது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையில் தவிர, டிண்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை அவர் அணுகுவதற்கும் அவர் கட்டுப்பாடுகளை விதித்தார்.
150,000 டொலர் பிணைப்பத்திரம் டி சில்வா எனப்படும் மெல்போர்ன் பெண் ஒருவரால் வழங்கப்பட்டது.