யாழ். திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள ஓட்டிச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையுடன் கூடிய பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட உள்ளதாக அங்கு சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.
குறித்த சிகிச்சை நிலையம் வடமாகாண சுகாதார அமைச்சின் ஆளுகைக்கு உட்பட்டதாகக் காணப்படுகின்ற நிலையில் அதனை கடந்த காலங்களில் நிர்வகித்த உயர் அதிகாரிகள் முறையற்ற நிர்வாக, நிதி விடையங்களை மேற்கொண்டு உள்ளதாக முறைப்பாடுகள் கொழும்புக்கு சென்றுள்ளதாக அறிய கிடைக்கிறது.
இதன் அடிப்படையில் வடமாகாண பிரதம செயலாளர் குழு ஒன்றை அமைத்து அதனை சரியான முறையில் நடத்திச் செல்வதற்குரிய பொறி முறை ஒன்றை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை அறிந்த சிலர் தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் அம்பலத்துக்கு வந்து விடுமென அஞ்சி குறித்த பயிற்சி நிலையம் மூடப்படப்போகுது என கதைகளைப் பரப்பியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த பயிற்சி நிலைய விவகாரம் தொடர்பில் அவதானத்துடன் இருக்கும் நிலையில் எக் காரணம் கொண்டும் மூட இடாமளிக்க மாட்டேன்.
வட மாகாணத்தை மையப்படுத்தி ஓட்டிசம் பயிற்சி நிலையத்தை நிரந்தரக் கட்டடத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.