பாணந்துறை, கோரக்காபொல பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இரண்டு பெண் பொலிஸாரின் கழுத்தை பிடித்து தள்ளி, துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று (12) இரண்டு பெண்கள் களுத்துறை நகரிலிருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தனர்.
இரண்டு பெண்களையும் பொலிசார் கைது செய்ய முயன்றனர். இரு பெண்களையும் அழைத்துச் செல்ல விடாமல் தடுத்த மேலும் மூன்று பேரையும் பொலிஸார் அழைத்துச் சென்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர், இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களின் கழுத்தைப் பிடித்து, போராட்டப் பெண்களை கைது செய்யுமாறு, அவர்களை நோக்கி தள்ளியுள்ளார்.
பின்னர், கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மற்ற 3 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
காவல்துறை பெண்களை பொதுமக்கள் துன்புறுத்தியது குறித்து, சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தும், காவல்துறையை விமர்சித்தும் வருகின்றனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் பாணந்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விசாரணையில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Who is this Police Officer Physically Harassing the Woman Activist & Lady Police Officers?
This is InHumane! @ambikasat @ThyagiR @saliyapieris @UN_HRC #Srilanka #HumanRights #PoliceBrutality pic.twitter.com/0ZXtcovedy
— Nuzly. (@nuzlyMN) November 12, 2022