25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா முக்கியச் செய்திகள்

நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினி மற்றும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். பரோலில் இருந்து நளினியை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, அவரை விடுதலை செய்தனர். இதேபோல் முருகன், சாந்தன் ஆகியோரும் நடைமுறைகள் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் சிறை நடவடிக்கைகள் முடிந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் புழல் சிறைக்கு வந்து இருவரையும் வரவேற்றனர். அப்போது உடன் வந்தவர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். இலங்கை தமிழர்கள் என்பதால் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு அழைத்து சென்றனர். சிறை வாயிலில் வாகனம் கடந்து செல்லும் போது பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நளினி தவிர மற்ற நால்வரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தெரிகிறது.

விளாத்திகுளத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று மாலைக்குள் மதுரை மத்திய சிறைக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் சற்றும் சாந்தனை வழக்கறிஞர் ராஜகுரு நேற்று சந்தித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘முருகன் விடுதலையானதும் காட்பாடியில் சில நாட்கள் தங்கியிருந்து லண்டன் செல்வது குறித்து ஆலோசிக்கவுள்ளனர். சாந்தன் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு இலங்கை செல்ல தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்” என்றார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று தீர்ப்பளித்தது.

மேலும், ‘‘பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு இந்த 6 பேருக்கும் பொருந்தும். சிறையில் 6 பேரின் நன்னடத்தை, அங்கு பயின்ற கல்வி, பரோல் விதிமுறைகள், மருத்துவ ஆவணங்கள், ஆளுநர் ஏற்படுத்திய தாமதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் – திருவண்ணாமலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

Pagetamil

சபாநாயகர் இராஜினாமா!

Pagetamil

ஜனாதிபதி அனுரவின் இந்திய பயண விபரம்!

Pagetamil

48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Pagetamil

உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்

Pagetamil

Leave a Comment