சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன்பு கானான் மொழியின் பயன்பாட்டைப் பற்றிய புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு அரிய கல்வெட்டு தெற்கு இஸ்ரேலில் ஒரு தந்தச் சீப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
2017 ஆம் ஆண்டில் டெல் லாச்சிஷ் தளத்தில் சீப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வுகளின் போதுதான், சீப்பில் இருந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான Yosef Garfinkel, அன்றாட வாழ்வில் கானான் மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தியதற்கான “நேரடி ஆதாரங்களை” இந்தக் கலைப்பொருள் வழங்குகிறது என்றார்.
சீப்பில் பொறிக்கப்பட்ட 17 எழுத்துக்கள், பேன்களை அகற்றப் பயன்படுகிறது. இது ஏழு வார்த்தைகளை உருவாக்குகிறது. “இந்த தந்தம் முடி மற்றும் தாடியின் பேன்களை வேரறுக்கட்டும்” என்று சீப்பில் பொறிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இது இஸ்ரேலில் கானானிய மொழியில் காணப்படும் முதல் வாக்கியம்” என்று Yosef Garfinkel குறிப்பிட்டார். “மனிதர் எழுதும் திறனின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்” என்று அழைத்தார்.
எருசலேமுக்கு தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள லாச்சிஷ், கானானியரின் முக்கிய நகரமாக இருந்தது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு 10 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர், ஆனால் சீப்பு பண்டைய லாச்சிஷ் மக்கள் பேசும் மொழியில் எழுதப்பட்ட முதல் “முழு வாய்மொழி வாக்கியத்தை” குறிக்கிறது என்று அறிக்கை கூறியது.
கானானில் யானைகள் இல்லை, அதனால் தந்தம் இல்லை என்பதால், சீப்பு இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருக்கலாம் என்று அது குறிப்பிட்டது.