லைவ் ஸ்டைல்

கணவாய் வறுவல்

கணவாய் வறுவல்

தேவையானவை :

கணவாய் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – ஒரு குழிகரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்

செய்முறை:

மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.

இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும்.

பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

பிறப்புறுப்பில் உள்ள முடிகளை நீக்குவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும்?

Pagetamil

இந்த ஆடை அணிந்தால் எந்த இரகசியமும் இருக்காதாம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!