30.2 C
Jaffna
April 28, 2024
விளையாட்டு

65 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து!

ரி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்தியது நியூசிலாந்து.

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றது.

க்ளென் பிலிப்ஸ் சதமடித்தார்.

ஒரு கட்டத்தில் 15 ஓட்டங்களிற்கு 3வது விக்கெட்டை நியூசிலாந்து இழந்த போது, ஆட்டம் இலங்கையின் பக்கம் திரும்பியதாக ரசிர்கள் நினைத்திருப்பார்கள். எனினும், க்ளென் பிலிப்ஸ் அதன் பின்னர் இலங்கை பந்து வீச்சை அடித்து நொறுக்கி சதமடித்தார்.

க்ளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் பெற்று, இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார்.

மிச்செல் 22 , சாண்ட்னர் 11 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

168 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கையின் ஆரம்பமே கோணலானது. தொடக்க வீரர் பதும் நிசங்க டக் அவுட்டாகினார். இலங்கையின் கணக்கிலும் ஓட்டமிருக்கவில்லை.

அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்து கொண்டேயிருந்தன.

இறுதியில் 19.2 ஓவர்களில் 102 ஓட்டங்களிற்கு இலங்கை ஆட்டமிழந்தது.

அணித்தலைவர் தசுன் சானக 35, பானுக ராஜபக்ச 34 ஓட்டங்களை பெற்றனர். பின்வரிசை வீரர் கசுன் ராஜித 8, உதிரிகள் 6 ஓட்டங்கள் கிடைத்தன.

பதும் நிசங்க, தனஞ்ஜய டி சில்வா, மகேஸ் தீக்சன டக் அவுட். மற்றையவர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்கள்.

ட்ரெண்ட் போல்ட் 13 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் க்ளென் பிலிப்ஸ்.

இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டதை போலத்தான் தோன்றுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் மீதமுள்ளன, இரண்டையும் வென்றாலும், அதிகபட்சமாக ஆறு புள்ளிகள் கிடைக்கும். எனினும், அது அரையிறுதிக்கு முன்னேற போதுமானதாக இருக்காது. ஏனைய முடிவுகளின் பின்னர் இது தெளிவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை வீரருக்கு மரண அடி: மும்பையை வீழ்த்தியது டெல்லி!

Pagetamil

ரி20 உலகக்கிண்ண தொடர் விளம்பரத்தூதர் உசைன் போல்ட்

Pagetamil

மகளிர் ஒருநாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தப்பத்து முதலிடம்!

Pagetamil

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

Leave a Comment