ஈரானில் கொல்லப்பட்ட மஹ்சா அமினியின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமினி போலீஸ் காவலில் இறந்து 40 நாட்களைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் புதன்கிழமை தீவிர போராட்டங்கள் நடந்தன. அமினியின் சொந்த ஊரான சாக்வெஸிலும் தீவிர போராட்டங்கள் நடந்தன..
மஹ்சா அமினி புதைக்கப்பட்ட கல்லறையில் திரண்டிருந்த மக்கள் மீது ஈரானிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
சரியான முறையில் ஹபாயா அணியவில்லையென கூறி, 22 வயதான அமினி , பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 16 இறந்தார். அன்று முதல் முதல் ஈரான் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1