26.4 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

ஜனநாயக பங்குதாரர்களிற்கான அரங்கம் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்கல் என்ற தொணிப்பொருளில் கலந்ரையாடல் நிகழ்வொன்று ஏறாவூர்பற்று பிரதேச சபை செங்கலடியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்காக உள்ளுர் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி சபை பிரதிநிதிகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மைத் தன்மை மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் என்ற செயல் திட்டத்தின் முதலாவது தெளிவூட்டலும் இப்பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வினை அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் தலைவருமாகிய கண்டுமனி லவகுகராசாவின் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.

நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன், உப தவிசாளர் கே.ராமச்சந்திரன், செயலாளர் வ.பற்குணன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன்போது மனித உரிமை சார்ந்த விடயங்கள், நில ஆக்கிரமிப்பு, போதைப்பொருள் பாவனை, போசாக்கு உணவு வழங்கல், குடி நீர் பிரச்சினை, சட்ட விரோத வடிசாரய உற்பத்தி, விவசாய செய்கையில் உள்ள தடைகள் மற்றும் யானை தொல்லை என்பன போன்ற மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment