26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

இன்ஸ்டா காதலியை பங்குபோடுவதில் மோதல்: ஒருவர் வெட்டிக் கொலை!

கணவனை பிரிந்து கள்ளக்காதலில் இரண்டு வாலிபர்களை வீழ்த்திய பெண்ணால் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல் மற்றும் களத்துமேடு பகுதி சேர்ந்த சுமன் ஆகியோர் நண்பர்கள்.

செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பூமிகா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது. இவர் இன்ஸ்டகிராமில் தொடர்ந்து வீடியோ வெளியிடுவது கணவனிற்கு பிடிக்கவில்லை. இதனால் பூமிகாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

பூமிகா மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில், பண்ருட்டியில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார். வேலை நேரம் போக பூமிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுகொண்டு பரவசமாக இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் அடிக்கடி ஆட்டோ சாரதி சுமனுடன் காதலில் விழந்து, இருவரும் காதலர்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சுமனின் நண்பன் சக்திவேலுவுடன் பூமிகா பழகியுள்ளார். அர் காதலாக மலர்ந்தது. சக்திவேலுவுடன் நெருங்கி பழக்க தொடங்கிய பூமிகா சுமனுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட சுமன் ஆத்திரமடைந்து சில தினங்களுக்கு முன்பு சக்திவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலாக உருவாகியது.

இதையடுத்து கடந்த 9ம் தேதி அன்று இரவு சமாதானம் பேசுவதாக சக்திவேலை சுமன் வரவழைத்துள்ளார். சுமன் பேச்சை நம்பி சக்திவேல் தட்டாஞ்சாவடி காளி கோயில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பாதையில் சந்தித்துள்ளனர். அப்போது,சுமன் உட்பட மூன்று நண்பர்கள் மது போதையில் இருந்தனர். பூமிகா விவகாரத்தில் இனி தலையிடக்கூடாது என்று சுமன் கண்டித்துள்ளார்.

அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் சுமன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலை கொடூரமான முறையில் தலை, கை பகுதிகளில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து வந்து புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் உள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்திவேல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், களத்துமேடு சுமன் , சுமன் நண்பர்கள் கொக்குப்பாளையம் குணா (21) ரித்திஷ் (எ) வசந்தகுமார் (19) பட்டிஸ்டா (எ) குணா (21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment