27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

18 மாவட்டங்களிற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நியமனம்!

18 புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் கையளிக்கப்பட்டன.

இதன்படி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொடவும், கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதானவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, காலி மாவட்ட தலைவராக சம்பத் அத்துகோரள, மாத்தறை மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க, ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமன்சிறி ஹேரத், புத்தளம் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, அனுராதபுரம் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன, கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல, கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் ராஜிக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய, மொனராகலை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க, திகாமடுல்ல மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள ஆகியோர் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

east tamil

இலங்கை காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலக அதானி நிறுவனம் முடிவு?

Pagetamil

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

Pagetamil

ஹிஸ்புல்லா, லெபனானை வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல்

east tamil

மின்தடைக்கான காரணத்தை நாளை சொல்வார்களாம்!

Pagetamil

Leave a Comment