கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரின் கடமையேற்பு நிகழ்வில் அரச தரப்பினருடன் இணைந்து வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.
கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்று (09) அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது அமைச்சர் நளின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான முசரப், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள், அரச தரப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1