2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கத் தயாராக இருப்பதாக ஆளுங்கட்சியின் சில தகவல்களும் அழைப்புகளும் கூறுவதாக அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண நேற்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கு தனது தரப்பிலிருந்து ஆதரவையும் கோருவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தனது 2 வருட காலப்பகுதியில் மூன்று பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நான்காவது பிரதமரை காண எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்களை அரசாங்கம் நசுக்க முற்பட்டால் அது மீள முடியாத தவறு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1