26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இந்தியா

சுகேஷின் குற்றங்களை தெரிந்தும் பண மோகத்திலேயே இலங்கை நடிகை ஜாக்குலின் காதலித்தார்; பணமும் கறந்துள்ளார்: குற்றப்பத்திரிகையில் தகவல்!

சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை.

இப்போது சுகேஷ் குற்றவாளி என்பதை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பணத்தின் மீதான மோகத்தால் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், “சுகேஷ் சந்திரசேகரின் கடந்த கால குற்றங்களை நடிகை ஜாக்குலின் நன்கு அறிந்திருந்தார். லீனா மரியா பால் தான் சுகேஷின் மனைவி என்பதும் தெரிந்தே இருந்தது. இவற்றையெல்லாம் ஜாக்குலினுக்கு தெரிவித்தது அவரின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷான் என்பவர்தான். இருப்பினும், ஜாக்குலின் அவற்றை தெரிந்தே புறக்கணித்து, சுகேஷுடனான உறவைத் தொடர்ந்தார்.

மேலும் சுகேஷிடமிருந்து நிதிப் பலன்களைப் பெற்றுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் சுகேஷ் உடனான உறவு மூலம் பணப் பலன்களை பெற்றுள்ளனர். அவர்கள் பெற்றவை அனைத்தும் சுகேஷ் செய்த குற்றத்தின் மூலம் கிடைத்தவையே.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடம் இருந்து 5 கைக்கடிகாரங்கள், 20 நகைகள், 65 ஜோடி காலணிகள், 47 ஆடைகள், 32 பேக்குகள், 4 ஹெர்ம்ஸ் பேக்குகள், ஒன்பது ஓவியங்கள் மற்றும் ஒரு வெர்சேஸ் கிராக்கரி செட் (விலையுயர்ந்த செராமிக் பாத்திரம்) ஆகியவற்றை பெற்றுள்ளார்.

ஏப்ரல் 2021இல் ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெற்றோருக்கு சுகேஷ் சந்திரசேகர் இரண்டு கார்களை பரிசளித்துள்ளார். அதை அவர் தனது விசாரணையின் போது வெளியிடவில்லை.

இவை மட்டுமில்லாமல், ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 இலட்சத்தையும் சுகேஷிடம் இருந்து பெற்றுள்ளனர். இவற்றுடன் 5.71 கோடி மதிப்பிலான பரிசுகளையும் வாங்கியுள்ளனர். பணத்தின் மீதான மோகம் காரணமாக சுகேஷ் குற்றங்களை பொருட்படுத்தாமல் தெரிந்தே அவருடன் பழகி குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை வாங்கியுள்ளார். இவை உறுதிப்படுத்தபட்டுள்ளது.

என்றாலும் விசாரணையின்போது சுகேஷ் சந்திரசேகரின் வழக்குகள் பற்றி தனக்கு ஒருபோதும் தெரியாது என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியது தவறானது.

மேலும், தான் சுகேஷால் பாதிக்கப்பட்டதாக தொடர்ந்து கூறிவந்த ஜாக்குலின் விசாரணையின்போது அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. விசாரணையில் இருந்து தப்பிக்க பொய்க் கதையை வெளிப்படுத்தினார் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

சுகேஷ் உடனான உறவை மறைக்க தனது செல்போனில் இருந்த தகவல்களை அழித்த ஜாக்குலின், தனது ஊழியர்களின் செல்போன் மூலம் சுகேஷை தொடர்புகொண்ட தரவுகளையும் மறைத்துள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு வாங்கியதுடன், அவருக்காக மும்பையின் உயர்மட்ட ஜூஹூ பகுதியில் உள்ள பங்களாவுக்கு முன்பணம் கொடுத்ததாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

சுகேஷ் தனது கூட்டாளியான பிங்கி இரானியிடம் வீடுகளை வாங்கும் திட்டத்தைப் பற்றி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஜாக்குலின் பெர்னாண்டஸை தனக்கு அறிமுகப்படுத்த பிங்கி இரானி  அந்த வேலைக்காக பல கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

“மும்பையின் ஜூஹு கடற்கரை பகுதியில் ஜாக்குலினுக்கு வீடு வாங்க சில டோக்கன் பணம் கொடுத்ததாகவும், பஹ்ரைனில் உள்ள ஜாக்குலினின் பெற்றோருக்கு ஏற்கனவே ஒரு வீட்டை பரிசாக கொடுத்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் பிங்கி இரானியிடம் தெரிவித்தார். மேலும், ஜாக்குலினுக்கு இலங்கையில் வீடு வாங்க பேரம் பேசியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களை சுகேஷ் உண்மையில் வாங்கியாரா என அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அதிகாரிகள் ஜாக்குலினிடம் அதைப் பற்றி விசாரித்தபோது, ​​சுகேஷ் தனக்கு இலங்கையில் ஒரு வீட்டைப் பற்றி சொன்னதாக ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் அங்கு சென்றதில்லை என கூறினார.

”சுகேஷ் இலங்கையில் தனக்காக ஒரு புதிய வீட்டை வாங்கியது குறித்து குற்றம் சாட்டப்பட்ட பிங்கி இரானியுடன் வாட்ஸ்அப் உரையாடல் பற்றி கேட்டபோது, ​​நடிகர் சுகேஷ் தனக்காக இலங்கையில் உள்ள வெலிகமவில் ஒரு சொத்து வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவர் அந்த சொத்தை பார்க்கவே இல்லை” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சொத்து உண்மையில் சுகேஷால் வாங்கப்பட்டதா அல்லது அவர் ஜாக்குலினிடம் பொய் சொன்னாரா என்பதை அமலாக்கத்துறை இன்னும் கண்டறியவில்லை.

ஜாக்குலின் மேலும் சில சொத்துக்களை தன் உறவினர்களுக்காக வாங்க சுகேஷின் திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் அல்லது அவரது உறவினர்களுக்காக சுகேஷ் வேறு ஏதேனும் சொத்துக்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை, ”என்று குற்றப்பத்திரிகை மேலும் கூறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment