29.5 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

அமெரிக்க ஓபன்: 3வது சுற்றிற்கு முன்னேறினார் செரீனா!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயோர்க் நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் வன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்டை 7-6 (4), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

40 வயதான செரீனா இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்து இருப்பதால் அவரது ஆட்டத்தை காண பல ரசிகர்கள் ஸ்டேடியத்தில் திரண்டு உற்சாகப்படுத்தினர்.

அடுத்த சுற்றில் செரீனா, அவுஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை சந்திக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment