24.7 C
Jaffna
February 4, 2023
உலகம்

முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொலை: ஜப்பான் காவல் துறை தலைவர் இராஜினாமா

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதால், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா நேற்று பதவியை இராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஷின்சோ அபேவின் நிகழ்ச்சியின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்துள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அந்தந்த பகுதி காவல் துறையினர் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக 4 காவல் துறை அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை மாற்றி அமைத்துள்ளோம். உளவுத் துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம், கனடாவின் மீது பறந்த சீனாவின் உளவு பலூன்

Pagetamil

பாகிஸ்தான் மசூதி தாக்குதல்: பொலிஸ்காரர் போல வந்த தீவிரவாதி (CCTV)

Pagetamil

உக்ரைன் போரில் நிச்சயம் வெல்வோம்: புடின்!

Pagetamil

LaMDA: ChatGPT-க்கு போட்டியாக விரைவில் கூகுள் களம் இறக்கும் சாட்பாட்

Pagetamil

மது அருந்திய தந்தையின் தலையில் சுத்தியலால் அடித்த ஷிவதர்ஷினி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!