27 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

இப்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டேன்; கோட்டா தப்பியோடியிருக்கக்கூடாது: மஹிந்த

தற்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என அவர் கொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

கட்சியை வழிநடத்த தான் தேவையா என்பதை பொதுஜன பெரமுனதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“அதை கட்சி முடிவு செய்யும். அப்படி இல்லாவிட்டாலும், நான் ஒரு சட்டத்தரணி. என்னால் நீதிமன்றங்களில் பணியாற்ற முடியும். தேவைப்பட்டால், நான் செல்ல தயாராக இருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

தன்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பேன் என்றும் கூறினார்.

“போகலாமா என்று அவர் என்னிடம் கேட்டால், நான் இல்லை, போகாதே என்று சொல்லியிருப்பேன். அவர் செய்ய வேண்டியதை அவர் முடித்திருக்க வேண்டும். ஆனால் கோட்டாபய ஒரு அரசியல்வாதி அல்ல” என்றார்.

“நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் கோட்டாபய ராஜபக்ச பொறுப்பல்ல. இதற்கு நான் மற்றும் முந்தைய அரசுகள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும். துரதிஷ்டவசமாக, அவர் (கோத்தபாய) தான் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார். எனவே, அவரைக் குறை கூற முடியாது. அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார். அவர் முன்பு ஒரு கடும்போக்குவாதி. பின்னர் அவர் மென்மையாக மாறினார்.

அவர் செய்ததை செய்திருக்கக்கூடாது, ஆனால் அவர் அரசியல்வாதி அல்ல. அவர் முன் இருந்த பணியை சரியாக முடித்திருக்க வேண்டும். முன்னாள் மஹிந்த தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment