27.6 C
Jaffna
August 19, 2022
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (19.8.2022 – 25.8.2022)

சுக்கிரன், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். துர்கையை வழிபடுங்கள்.

அசுவினி: ஞாயிறு வரையில் கவனமாக செயல்படுங்கள். திங்கள் முதல் உற்சாகமாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதன் வியாழனில் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வருவாய் உண்டாகும்.

பரணி: வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் மனம் விரும்பிய வகையில் செயல்படுவீர்கள். மனதிற்கினிய சம்பவங்கள் நடந்தேறும். திங்கள், செவ்வாயில் வெளித்தொடர்புகள் ஆதாயம் தரும். புதன் வியாழனில் யோசிக்காமல் செய்யும் வேலைகளில் நெருக்கடி உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: வார்த்தைகளில் கவனம் தேவை. நண்பர்கள் வழியே புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நிலைமைகளை சமாளிக்கும் அளவிற்கு வரவுகள் இருக்கும். திங்கள் செவ்வாயில் முயற்சிகள் வெற்றியாகும். புதன் வியாழனில் தவறான எண்ணங்களால் தடுமாற்றம் அடைவீர்கள்.

சுக்கிரன், புதன், கேது நன்மைகளை வழங்குவார்கள். செந்தில் முருகனை வழிபடுங்கள்.

கார்த்திகை 2, 3, 4: வெள்ளிக்கிழமை காலை வரை அலைச்சல் செலவுகள் என்றிருந்தாலும் அதன்பின் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். திங்கள் செவ்வாயில் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். புதன் வியாழனில் துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் ஈடுபட்ட முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

ரோகிணி: உங்கள் செயல்களில் இழுபறி, நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள். புதன் வியாழனில் நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். பகைவர்களின் தொல்லைகள் விலகும் உங்கள் முயற்சிகள் ஜெயமாகும்.

மிருகசீரிடம் 1, 2: ஞாயிறு வரை சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். திங்கள் கிழமையில் இருந்து உங்கள் முயற்சிகளில் கூடுதல் பலன்கள் கிடைக்கும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். புதன் வியாழனில் புதிய முயற்சிகள் நிறைவேறும். உங்களுடைய செயல்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

சுக்கிரன், சூரியன், ராகு நன்மைகளை வழங்குவார்கள். சூரிய வழிபாடு உங்கள் செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

மிருகசீரிடம் 3, 4: ஞாயிறு வரையில் செலவுகள் அதிகரிக்கும். முயற்சிகளில் கடினமான நிலை உண்டாகும். அதன்பின் எதிர்பார்த்தவற்றில் நன்மைகள் உண்டாகும். முதலீடுகளில் இருந்து வரவு காண்பீர்கள். அந்நியர்கள் வழியே ஆதாயநிலை உருவாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

திருவாதிரை: நெருக்கடிகளில் இருந்து மீளுவீர்கள். ஞாயிறு வரை செலவுகள் அதிகரித்தாலும் திடீர் வரவுகளால் சமாளிப்பீர்கள். திங்கள் முதல் உங்கள் திறமை பளிச்சிடும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியிலான முயற்சிகளில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். ஞாயிறு வரையில் குடும்பத்திற்காக செலவுகளை சந்திப்பீர்கள் பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தொடரும். உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தவை நடந்தேறும்.

செவ்வாய், சுக்கிரன் புதன் நன்மைகளை வழங்குவார்கள். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

புனர்பூசம் 4: ஞாயிற்றுக்கிழமை வரை உங்கள் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். திங்கள் செவ்வாயில் வருமானத்தில் தடை உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். புதன் வியாழனில் உங்கள் செயல்பாடுகள் வெற்றியாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் குறித்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பூசம்: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அரசு வகையிலான முயற்சிகள் நிறைவேறும். திங்கள் செவ்வாயில் வரவும் செலவும் போட்டி போடும். புதன் வியாழனில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.

ஆயில்யம்: சுகஸ்தான கேதுவால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும் லாப சந்திரனால் ஞாயிறு வரை வருமானம் அதிகரிக்கும். செவ்வாயால் செயலில் வேகம் இருக்கும். உறவினர்களும் நண்பர்களும் உதவி புரிவார்கள். அந்நிய மனிதர்களின் வழியே ஆதாயம் அதிகரிக்கும்.

சுக்கிரன், கேது நற்பலன்களை வழங்குவார்கள். விநாயகரை வழிபடுங்கள்.

மகம்: வெள்ளிக்கிழமை காலை வரை இருந்த நெருக்கடி அதன்பின் விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் இந்த வாரம் விறு விறுப்பாக நடந்தேறும். வியாபாரம், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பண வரவு அதிகரிக்கும்.

பூரம்: புதன் கிழமை காலை வரை உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். அதன்பின் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உங்கள் ராசிநாதன் ஆட்சி பெற்றிருப்பதால் அரசு வழியில் ஆதாயமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு, செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திரம் 1: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். புதன் வியாழனில் வரவு செலவில் கவனம் தேவைப்படும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நன்மையாகும்.

சுக்கிரன் யோகமான பலனை வழங்குவார். வராகியை வழிபடுங்கள்.

உத்திரம் 2, 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். ஞாயிறு இரவு வரை செலவுக்கேற்ற வரவு வந்து கொண்டிருக்கும். திங்கள் செவ்வாயில் வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதன் வியாழனில் எதிர்பாராத வரவுகள் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும்.

அஸ்தம்: உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். ஞாயிறு வரை விருந்தினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திங்கள் கிழமை முதல் நீங்கள் எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நன்மைகள் உண்டாகும்.

சித்திரை 1, 2: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக இருப்பதால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் முயற்சியின் அளவிற்கு வரவுகள் இருக்கும்.

சந்திராஷ்டமம்: 16.8.2022 நள்ளிரவு 2:31 மணி – 19.8.2022 காலை 10:51 மணி

புதன், சூரியன் முன்னேற்றத்தை வழங்குவார்கள். ஈஸ்வர வழிபாடு நன்மையாகும்.

சித்திரை 3, 4: ஞாயிறு இரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் கவனம் தேவை. முயற்சிகள் தள்ளிப்போகும். அதன்பின் நிலைமை சீராகும். லாப ஸ்தானத்தில் உள்ள சூரியன், புதன் உங்கள் நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார்கள். திங்கள் முதல் வியாழன் வரை உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சுவாதி: ஞாயிறு இரவு வரை சில சங்கடமான சம்பவங்களை சந்திப்பீர்கள். ஏழாமிட ராகு ஆசையை அதிகரிப்பார் அதனால் உங்கள் மனம்போன போக்கில் செல்வீர்கள். கட்டுப்பாடுகளால் உங்களை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். லாப சூரியனால் அரசு வழியிலான முயற்சிகள் நிறைவேறும்.

விசாகம் 1, 2, 3: ஞாயிறு வரை எவ்வளவுதான் கவனமாக செயல்பட்டாலும் ஏதேனும் சில தவறுகள் உண்டாகும். எதிர்பாலினரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள் என்றாலும் சூரிய பலத்தால் அனைத்தையும் சமாளித்து நன்மை அடைவீர்கள்.

சந்திராஷ்டமம்: 19.8.2022 காலை 10:52 மணி – 21.8.2022 இரவு 9:22 மணி

ராகு, சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

விசாகம் 4: ஞாயிற்றுக்கிழமை வரை உங்கள் முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். நினைத்ததை அடைவீர்கள். அதன் பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்கள் செயல்களில் சிரமங்கள் உண்டாகும். தெளிவான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் போகும். புதன் கிழமை காலை முதல் நிலைமை சீராகும்.

அனுஷம்: எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும். உங்கள் ராசிநாதன் ஏழில் சஞ்சரிப்பதால் தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல் உண்டாகும். திங்கள் செவ்வாயில் கவனமுடன் செயல்படுவதும் நிதானமாக இருப்பதும் நன்மையாகும். புதன் கிழமை முதல் உங்கள் செயல்கள் லாபமாகும். செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கேட்டை: ஞாயிற்றுக்கிழமை வரை உங்கள் முயற்சிகள் அனுகூலமாகும். திங்கள் செவ்வாயில் பழைய பிரச்னைகள் தலை தூக்கும். திட்டமிட்டிருந்த பணிகளில் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். அதன் பின் எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்: 21.8.2022 இரவு 9:23 மணி – 24.8.2022 காலை 9:02 மணி

செவ்வாய், சுக்கிரன், கேது யோகத்தை வழங்குவார்கள். சனீஸ்வரரை வழிபடுங்கள்.

மூலம்: புதன் கிழமை காலை வரை உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியாகும் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெற்று பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். புதன் வியாழனில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.

பூராடம்: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையான வழியில் வரவுகள் உண்டாகும். அரசு வழி முயற்சிகளிலும் பலன்கள் உண்டாகும். புதிய நட்பினால் சங்கடங்களை விட்டு வெளியில் வருவீர்கள். புதன் காலை முதல் வரவுகளில் தடையும் செயல்களில் இழுபறியும் உண்டாகும்.

உத்திராடம் 1: வழக்கத்தை விட வியாபாரம் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும். சத்ரு ஸ்தான செவ்வாயால் பகைவர்களின் தொல்லை விலகும். புதன் கிழமை காலை முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்கள் இழுபறியாகும்.

சந்திராஷ்டமம்: 24.8.2022 காலை 9:03 மணி – 26.8.2022 இரவு 8:13 மணி

சுக்கிரன், நன்மைகளை வழங்குவார். ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

உத்திராடம் 2, 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும் சந்திரனின் அருளால் நெருக்கடிகளில் இருந்த மீளுவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பண வருவாய்க்குரிய முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து லாபம் காண்பீர்கள்.

திருவோணம்: ஞாயிறு வரை உங்கள் செயல்கள் இழுபறியாகவே இருக்கும். அந்நியர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். திங்கள் கிழமை முதல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் நன்மைகளை அடைவீர்கள்.

அவிட்டம் 1, 2: கிரக பலம் குறைந்திருப்பதால் உங்கள் முயற்சிகளால் நன்மைகளைக் காண வேண்டிய வாரமிது. ஞாயிறு வரை உங்கள் செயல்கள் இழுபறி ஆனாலும் திங்கள் முதல் ஆதாயம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒன்று இந்த வாரம் நிறைவேறும்.

ராகு உங்களுக்கு நன்மையை வழங்குவார். குல தெய்வத்தை வழிபடுங்கள்.

அவிட்டம் 3, 4: ஞாயிறு வரை முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பீர்கள். அரசு வழியில் நெருக்கடிகள் உண்டாகும். திங்கள் செவ்வாயில் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்களின் நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். புதன் வியாழனில் தொழில், உத்தியோகம் சிறப்படையும். வரவுகள் அதிகரித்து மகிழ்வீர்கள்.

சதயம்: சுக ஸ்தான செவ்வாயால் உங்கள் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்றி சீராகும். ஞாயிறு வரை செயல்களில் சங்கடம் ஏற்படும். திங்கள் முதல் குடும்பம், சகோதரர்கள் வகையில் நன்மைகள் தோன்றும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும்.

பூரட்டாதி 1, 2, 3: தைரிய ஸ்தான ராகுவால் எதிரிகளால் உண்டான சங்கடங்களை முறியடிப்பீர்கள். ஏழாமிட சூரியன் அலைச்சலை அதிகரிப்பார். ஞாயிறு வரை உங்கள் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அதன் பின் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள்.

செவ்வாய்,சுக்கிரன், சூரியன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். உலகளந்த பெருமாளை மனதில் எண்ணி வழிபடுங்கள்.

பூரட்டாதி 4: ஞாயிறு வரையில் உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அதன்பின் உங்கள் முயற்சிகள் நடந்தேறும் என்றாலும் அதில் சில சங்கடங்கள் உண்டாகும். அரசு வகையிலான செயல்கள் ஆதாயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

உத்திரட்டாதி: மூன்றாமிட செவ்வாயால் உங்கள் செயலில் வேகம் அதிகரிக்கும். சூரியனும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார் என்பதால் அரசு வழியிலான செயல்களில் உங்கள் எண்ணம் நிறைவேறும். வீடு மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். எட்டாமிட கேதுவால் ஆரோக்கியத்தில் சங்கடம் உண்டாகலாம் என்பதால் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.

ரேவதி: ஞாயிறு வரை உங்கள் விருப்பங்கள் எளிதாக நிறைவேறும். அரசு வகையிலான முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும். திங்கள், செவ்வாயில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். புதன் வியாழனில் வரவு அதிகரிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0

Related posts

சில்லாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

Pagetamil

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: சிம்ம ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

Pagetamil

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!