25.5 C
Jaffna
December 1, 2023
விளையாட்டு

ராயஸ்தான் ரோயல்ஸ் உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார்: ரோஸ் டெய்லர்!

ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக நியூஸிலாந்து முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் . ஓய்வு பெற்றபிறகு அவர் எழுதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

‘பிளாக் அண்ட் வைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார் டெய்லர்.

2011இல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய போது நிகழ்ந்த கசப்பான சம்பவத்தையும் நினைவுகூர்ந்துள்ளார்.

மொஹாலியில் நடந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு நடந்த சம்பவம் அது.

“பின்னர், அணி, உதவி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஹோட்டலின் மேல் தளத்தில் உள்ள பாரில் இருந்தோம்.

அந்தப் போட்டியில் நான் டக் அவுட் ஆனபோது ‘டக் அவுட் ஆவதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் கொடுக்கவில்லை’ என்று கூறி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் ஒருவர் என் முகத்தில் நான்கு முறை அறைந்தார். அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவை  கடினமான அறைகள் இல்லை. மேலும், முழுக்க முழுக்க விளையாட்டுக்காக இது என்பதும் என்னால் சொல்ல முடியவில்லை

. எனினும், தொழில்முறை விளையாட்டு சூழல்களில் இதுபோன்று நடந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று டெய்லர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பொருட்கள் போல் வீரர்கள் விற்பனை: ஐபிஎல் செயல்முறையும், சில விளக்கங்களும்!

Pagetamil

‘நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்’: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

Pagetamil

IPL 2024 அப்டேட்: 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Pagetamil

மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸூக்கு ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட தடை!

Pagetamil

இலங்கையின் பயிற்சியாளராக முன்னாள் வீரர்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!