அவுஸ்திரேலியாவில் தொடங்கிய ஜென்னி, ஸ்டீவ் சர்ச்சை இப்பொழுது உலகளவில் கவனத்த ஈர்த்த செய்தியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து வெளியாகும் மேக்கே & விட்சண்டே லைஃப் நாளிதழில் நான்காம் பக்கத்தில் வெளியான விளம்பரமொன்றே சர்ச்சையின் ஆரம்பம்.
காதலனால் ஏமாற்றப்பட்ட ஜென்னி என்ற பெண்னால் பிரசுரித்ததை போல தோன்றும் அந்த விளம்பரத்தில்,
‘அன்புள்ள ஸ்டீவ், நீங்கள் அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நீ என்ன ஒரு கேவலமான ஏமாற்றுக்காரன் என்பதை இப்போது ஊர் முழுக்க தெரிந்துகொள்ளும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அது ஒரு முழுப் பக்க விளம்பரம்.
மேலும் இந்த விளம்பரத்திற்கு காதலனின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இது உண்மையான விளம்பரமாக இருக்குமென ஒரு தரப்பினர் கூறினாலும், இன்னொரு தரப்பினர் அதன் நம்பக தன்மையில் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள். ஒரு கவனயீர்ப்பு முயற்சி அல்லது ரியாலிட்டி ஷோ விளம்பரம் என அவர்கள் கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும், ஜென்னி உண்மையானவர் என நம்புபவர்கள், அவரது துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து செய்தித்தாள் நிறுவனம் தனது பேஸ்புக்கில் அளித்துள்ள விளக்கத்தில், விளம்பரத்தில் கூறியபடி எந்தவித கிரெடிட் கார்டில் இருந்தும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும், விளம்பரம் கொடுத்த ஜென்னி குறித்த விவரங்களை தெரிவிக்க முடியாது என்றும், அதேபோல் விளம்பரத்தில் உள்ள ஸ்டீவ் யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் பதிவு செய்துள்ளது.
ஜென்னி யார் என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள ‘ஸ்டீவ்’களும் குழப்பமடைந்துள்ளனர். இந்த பெயர் பலருக்கு உள்ள நிலையில், எந்த ஸ்டீவ்வை, எந்த ஜென்னி குற்றம்சாட்டியுள்ளார் என்ற சர்ச்சைகளின்எமத்தியில், அங்குள்ள உணவகம் ஒன்று அடுத்து செய்த காரியம், ஜென்னி- ஸ்டீவ் சர்ச்சைக்கு உயிரூட்டியுள்ளது.
அடிலெய்டின் தி ஹைவே ஹோட்டல், ‘ஜென்னி’யிடம் அனைத்து ஸ்டீவ்கள் சார்பிலும் மன்னிப்பு கோரும், விளம்பர பலகை ஒன்றை வீதியோரமாக அமைத்துள்ளது, சர்ச்சையை சுவாரஸ்யமாக்கியுள்ளது.