28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

நியாயமற்ற மின் கட்டண உயர்வு: நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி!

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் மின்சாரக் கட்டண உயர்வு நியாயமானதல்ல என எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார்.

தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படாமையால் கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி, நிலையான மின்சாரம் வழங்கப்படுமாயின் கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

நாடு டொலர் தட்டுப்பாட்டுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய உயர்வு மூலம் அரசாங்கத்திற்கு ரூபாய் மட்டுமே மிச்சமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

டொலர் தட்டுப்பாட்டின் சுமையை பொதுமக்கள் மீது சுமத்தக் கூடாது என்று அவர் கூறினார்.

நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ள வர்த்தகர்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்றும் விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொருளாதாரம் மற்றும் அரச நிதிகள் தவறாக நிர்வகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை மின்சார சபைக்கு பல இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதத்துக்குள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த மின் கட்டண உயர்வு தேவைப்படுவதாக அமைச்சர் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிற திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் கடந்த பத்து மாதங்களாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் அவர்களை மூட நேரிடும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு மின் உற்பத்தித் திட்டத்தையும் ஆரம்பிக்கத் தவறியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்டணங்களை அதிகரிக்காமல் இருக்க விரும்புவதாக தெரிவித்த அமைச்சர், எனினும் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறந்த தீர்வுகளை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார சபைக்கு 612 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை உள்ளதாகவும், மின்சார சபையின் மாதாந்த செலவு 30 பில்லியன் ரூபா எனவும், சம்பளம் மற்றும் கொடுப்பனவு கொடுப்பனவுகளுக்கு 3.2 பில்லியன் ரூபாவும், மின்சார உற்பத்திக்கு 27 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

யாழ், நல்லூரில் டெங்கை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!