28.3 C
Jaffna
June 16, 2024
இலங்கை

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சார்பு 5 ரிட் மனுக்கள் வாபஸ்!

காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டக் களத்தை விட்டு வெளியேறவும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றவும் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

இன்று (10) காலி முகத்திடல் போராட்டத் தளத்தை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் கூட்டாகத் தீர்மானித்ததையடுத்து, ரிட் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 3ஆம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு, ஓகஸ்ட் 5ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கொழும்பு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோட்டை காவல்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு செவிசாய்க்கத் தவறும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் கோட்டை பொலிஸார் எச்சரித்தனர்.

இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்

Pagetamil

மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

Pagetamil

ஜனாதிபதி- மன்னார் ஆயர் சந்திப்பு

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்… ரணிலின் வெற்றியை உறுதி செய்யும் கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

Pagetamil

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!

Pagetamil

Leave a Comment