குருணாகல் போதனா வைத்தியசாலையின் பதிவு அறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆவணங்கள் இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளது.
“திருடப்பட்ட ஆவணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் பதிவு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் உள்ளன” என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பில் பதிவு அறையின் பொறுப்பதிகாரி ஒருவர் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தகமுவ இது தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆவணங்கள் ஒரே முதடவையில் திருடப்படவில்லை என்றும், பல வாரங்களாக தொடர்ந்து வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1