27.2 C
Jaffna
December 5, 2023
இலங்கை

இலங்கை பெற்றோலிய சந்தையில் புதிதாக நுழையவுள்ள சீன நிறுவனம்!

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி கூட்டுத்தாபனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம், இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினோபெக் ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் குதத்தை பராமரித்து வருகிறது.

சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வதற்கு இலங்கை சந்தையில் நுழையும் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் தொடங்குவதற்கு எரிசக்தி அமைச்சரின் முன்மொழிவுக்கு ஜூன் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதத்தை வழங்குகின்றது, எஞ்சிய 10 வீதமானது லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

யாழ், நல்லூரில் டெங்கை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!