27.6 C
Jaffna
August 19, 2022
கிழக்கு

QR குறியீட்டை ஸ்கான் செய்யும் செயலியுடன் கதிர்காமம் யாத்திரை சென்ற முகாமையாளர்; 2 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள்: மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது. சங்க முகாமையாளர் கதிர்காம யாத்திரை சென்றதால் கியூ.ஆர் குறியீட்டு தன்னியக்க செயற்பாட்டு இயக்க தொலைபேசி தன்வசம் பாதுகாப்பில் இருந்துள்ளதால் எரிபொருள் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

2 நாட்களாக டீசல் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு இன்று டீசல் எரிபொருள் வழங்கப்படும் என தகவல் தெரிவித்து கூட்டுறவு சங்க உத்தியோகஸ்த்தர்களால் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்டது போன்று எரிபொருள் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பின்னர் பொறுமை இழந்தவர்கள் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் கவனத்திற்கு தெரியப்படுத்தியும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு சென்று தங்களது நிலவரம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிசார் முறைப்பாடு பதிவு செய்ததுடன் நிலையப் பொறுப்பதிகாரி லசந்தபண்டார சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.

கியூ.ஆர்.குறியீட்டுடன் கூடிய எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. சங்க முகாமையாளர் கதிர்காம யாத்திரை சென்றதால் கியூ.ஆர். குறியீட்டு தன்னியக்க செயற்பாட்டு இயக்க தொலைபேசி தன்வசம் பாதுகாப்பில் இருந்துள்ளது. இதனால் எரிபொருள் வழங்குவதில் நிர்வாகத்திற்கு முகாமைத்துவ சிக்கல் நிலை ஏற்பட்டிருந்ததாக இதன்போது தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவ் குழப்ப நிலைமையை சீர்செய்ய கியூ.ஆர். குறியீட்டு பிரதியினை பெற்று எரிபொருள் வழங்குமாறு பொலிசாரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனையடுத்த மேற்படி முறையின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.இருந்தபோதிலும் அரசினால் அனுமதி வழங்கப்பட்ட கியூ.ஆர். குறியீட்டின் அடிப்படையிலான எரிபொருள் அளவு வழங்கப்படவில்லையென மக்கள் கவலை தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மயானத்தில் சடலத்தின் தலையை திருகியெடுத்து வீட்டு வளவில் வீசிய இளைஞர்கள்: மட்டக்களப்பில் பகீர் சம்பவம்!

Pagetamil

கல்முனையில் இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்!

Pagetamil

பரீட்சை எழுதிய மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியர்: மட்டக்களப்பில் ‘பகீர்’ சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!