பர்மிங்காமில் இன்று நடைபெற்ற 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த வீராங்கனை நெத்மி பொருதொட்டகே இலங்கையின் மூன்றாவது வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
2022 பர்மிங்காம் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோகிராம் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் நெத்மி பொருதொட்டகே வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
கோவென்ட்ரி அரங்கில் நடந்தடி போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஐரீன் சிமியோனிடிஸை தோற்கடித்தார்.
18 வயதான பொருதொட்டகே இன்று நடந்த இந்த நிகழ்வின் அரையிறுதியில் இந்தியாவின் அன்ஷு மாலிக்கிடம் தோற்றார். ஆனால் அவுஸ்திரேலிய வீரரை தோற்கடித்தார்.
2022 பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இலங்கை 25வது இடத்தில் உள்ளது.