இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை ஏற்றி அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பலர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடுகளுக்கு பபயணித்துள்ளனர் அத்துடன் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது
இந்த நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்த 46 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகினை கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜூலை 6 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து மீன்பிடி படகில் பயணத்தை ஆரம்பித்தாக குறிப்பிடப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதனையடுத்து 46 பேரை ஏற்றிய அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.