27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

ஜனாதிபதியை சந்தித்த போராட்டக்காரர்கள் சிலர்!

போராட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்படத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் போராட்டத்தை முறியடிப்பதே இப்போதைய சவாலாக உள்ளதாகத் தெரிவித்த விக்கிரமசிங்க, அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்ட களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளும் சகல வழிகளிலும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட சில தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனநாயக விரோத அரசியலுக்கும் வன்முறைக்கும் தாம் எதிரானவர் எனவும், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக புதுமையை நிறுத்தி நல்ல சமூக ஜனநாயகத்தை உருவாக்க முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

போராட்டக்காரர்களை கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற விடயங்களை அரசாங்கம் கைவிட வேண்டுமென்றும், காலிமுகத்திடலில் தொடர்ந்து போராடுவதா வெளியேறுவதா என்பது மக்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வடக்கில் பொலிவிழந்த விவசாயிகள் போராட்டம்!

Pagetamil

தொல்லியல் செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Pagetamil

செல்வாக்கை பயன்படுத்தி சனத் ஜயசூரிய தடுப்பூசி செலுத்திய குற்றச்சாட்டு: சுகாதார அமைச்சு செயலாளர் இடமாற்றம்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!