27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்கள் 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு தீர்மானம்!

இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (8) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் பக்கத்துடன் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை சாலை முகாமையாளரை இடம்மாற்றுமாறு கோரி இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்.

பருத்தித்துறை சாலை முகாமையாளரை இடம்மாற்றாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, பருத்தித்துறை சாலை ஊழியர்கள் அண்மையில் பிராந்திய முகாமையாளருக்கு அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, பருத்தித்துறை சாலைக்கு சென்ற பிராந்திய முகாமையாளர், சாலை ஊழியர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, பருத்தித்துறை சாலை முகாமையாளர், பொறியியலாளர், பண்டகசாலை உத்தியோகத்தரை தற்காலிகமாக இடம்மாற்ற முயற்சி மேற்கொண்டார். பருத்தித்துறை பொறியியலாளராக காரைநகரில் பணியாற்றிய பொறியியலாளரை வாரத்திற்கு இரண்டு தடவைகள் பருத்தித்துறைக்கு வருமாறு பணித்திருந்தார்.

எனினும், கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சாலை முகாமையாளர், பிராந்திய முகாமையாளரின் உத்தரவை மீறி, சாலைக்கு வந்து, தனது அலுவலகத்திற்குள் நுழைந்து,அலுவலக கடமைகளில் ஈடுபடுபவர்களிற்கு இடையூறு செய்து வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். தமது போராட்டத்திற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்பவில்லையென்றால்  பிராநதிய முகாமையாளருக்கு எதிராகவும் விரைவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஏகமனதாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நாளை வரை நீதிமன்றம் அவகாசம்!

Pagetamil

கைக்குண்டு விவகாரத்தில் கைதான வைத்தியர் வீட்டில் சிக்கிய ஆயுதங்கள்!

Pagetamil

நேற்று 26,028 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!