25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் அடுத்த வாரம்!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் ஓகஸ்ட் மாதம் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்தப்படுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

மூன்று நாள் விவாதம் நடத்துமாறு பல கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது.

இதன்படி, எதிர்வரும் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் அதேவேளை, விவாதம் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றமும் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை கூடவுள்ளது.

சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படாது என பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டிற்கான 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் தசநாயக்க தெரிவித்தார்.

மேலும், அண்மையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இரத்துச் செய்யப்பட்ட குழுக்களின் மீள் நியமனம் தொடர்பிலும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்படி, மற்ற குழுக்களையும் சேர்த்து 9ம் திகதி தெரிவுக் குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment