29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

எரிபொருள் கஷ்டத்தை இந்த வருடம் வரை பொறுத்துக்கொள்ள வேண்டும்!

இந்த வருட இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“தற்போது, ​​நம் முன் உள்ள உடனடித் தேவை எரிபொருள். எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் சர்வதேச உதவியைப் பாராட்டுகின்ற அதேவேளையில், எமது சொந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணம் மூலம் அவற்றை இறக்குமதி செய்வதற்கான முறைமையை நாம் ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது.

எரிபொருளுக்கான கொடுப்பனவுகளைச் சமநிலைப்படுத்துவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும். மறுபுறம், எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட வேண்டும். இந்த கஷ்டங்களை இந்த ஆண்டு இறுதி வரை தாங்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நீண்ட கால பொருளாதார கொள்கைகளின் ஊடாக இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment