சீனாவின் ஜியான்சி மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் புதன்கிழமை (3) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் காவல்துறையை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சமூக ஊடக தளமான வெய்போவில் 48 வயதான நபர், தனியார் மழலையர் பள்ளியில் நுழைந்து குறைந்தது மூன்று பேரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர். தாக்குதலாளி தொப்பி மற்றும் முகமூடி அணிந்திருந்தார்.
சந்தேக நபர் லியு மௌஹூய் என உள்ளூர் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் வயது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சந்தேக நபரை கைது செய்ய பொது பாதுகாப்பு அமைப்புகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.