27.6 C
Jaffna
August 19, 2022
முக்கியச் செய்திகள்

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு 2 இடங்கள் ஒதுக்கியுள்ளேன்: ஜனாதிபதி!

போராட்டக்காரர்களிற்கு கொழும்பு, கண்டி மாநகரசபையின் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போயிருந்து போராட்டங்களை நடத்துங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகிய பின்னர், நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் ரணில் விக்கிரமசிங்க இன்று கொள்ளைப் பிரகடன உரையை ஆற்றினார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவான நபராக நான் தெரிவு செய்யப்பட்டேன். இந்தச் சபை இலங்கையின் பல்வேறு தரப்பு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இலங்கையின் பாராளுமன்றமாக நீங்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வாருங்கள்.

இன்று நான் உங்களை ஒவ்வொரு இலங்கையர்களின் ஜனாதிபதியாக அழைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கும் கலாசார நடைமுறைகளைப் பேணுவதற்கும் அனைவருக்கும் உள்ள உரிமையைப் உறுதிப்படுத்துகிறேன்.அத்துடன் அரசியலமைப்பாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து ஏனைய மதங்களை பாதுகாப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

“வெளியுறவுக் கொள்கையின் உறுதியற்ற தன்மையால், பல விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எங்களுக்கு எதிரிகள் இல்லை. அதனால்தான் நட்புரீதியான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டதை உறுதிசெய்கிறோம்.”

ஜனாதிபதி ராஜாவாகவோ அல்லது கடவுளாகவோ இருக்க வேண்டியதில்லை

போராட்டத்திற்கு மட்டுமன்றி நாட்டின் எதிர்காலத்திற்கும் இளைஞர்களின் பங்களிப்பு எடுக்கப்படும்.

“எதிர்வரும் தேர்தல்கள் இளைஞர்களின் திருப்பமாக இருக்க வேண்டும், அதற்கான இடத்தை உருவாக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி, மக்களால் உயர்த்தப்பட்ட அரசனாகவோ, கடவுளாகவோ மாறக்கூடாது.அந்த முறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.அவரை தனி சின்னங்களில் அடைக்கக்கூடாது.எனவே, இருபத்தி இரண்டாம் திருத்தத்தை ஏற்கும் என நம்புகிறோம்.

கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி துறைகள் எதிர்நோக்கும் தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மறுமலர்ச்சிக்கு இந்தியா அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் ஒருபோதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாத வகையில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் 25 வருடங்களுக்கு தேசிய பொருளாதார கொள்கையொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் நபருக்கு நபர் மாற முடியுமா?இந்த நிலையை ஆழமாக ஆராய்ந்தோம். 2025க்குள் முதன்மை பட்ஜெட்டில் உபரி பட்ஜெட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளோம். 2026 ஆம் ஆண்டிற்குள் நிலையான பொருளாதார நிலையை அடைவதே எமது இலக்காகும்.

ஒரு தொடர்ச்சியான கொள்கையை முன்னெடுத்துச் சென்றால் 2048 ஆம் ஆண்டளவில் முழுமையான பொருளாதார அபிவிருத்தி கொண்ட நாடாக மாற முடியும்.

வங்கி முறையின் ஊடாக வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்கு அனுப்புவது ஊக்குவிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு உரிமைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

வசதி குறைந்த பிரிவினர் மீது மிகுந்த கவனம் செலுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, மீண்டும் பரந்த மத்தியதர வர்க்கத்தை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படையை தயார் செய்வதாகவும் தெரிவித்தார்.

வன்முறைக்கு இடமளிக்கப்படமாட்டாது ஆனால் அமைதியான போராட்டத்திற்கு மதிப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்களை பாதுகாக்கவும், அவர்களிற்காக முன்னிற்காகவும் விசேட பணியகம் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டத்தை மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.முறையியலில் மாற்றம் வரும் என எதிர்பார்த்தவர்கள் காலி முகத்திடலுக்கு வந்தனர். இந்தப் போராட்டம் வன்முறையின்றி ஆக்கப்பூர்வமாக நடத்தப்பட்டது. அவர்கள் எந்த வன்முறை செயலையும் செய்யவில்லை.சிறு குழந்தைகளை கூட அழைத்து வர பெற்றோர்கள் பயப்படவில்லை.

ஆனால் பின்னர் அகிம்சை ஒடுக்கப்பட்டு வன்முறை வெளிப்பட்டது. சிலர் அகிம்சைக்கு பதிலாக வன்முறையை புகுத்தினார்கள். தீவிரவாதம் கசிந்தது.வன்முறையையும் பயங்கரவாதத்தையும் நான் அனுமதிக்கவில்லை. ஆனால் அகிம்சை அனுமதிக்கப்படுகிறது.

கொழும்பு, கண்டி மாநகரசபையின் பகுதிகள் அமைதிப் போராட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அமைதியற்ற இடங்களில் இருந்து வெளியேறி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைவரும் உதவ வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

3 மாதத்தில் 1,600 யாழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தனர்: மிகப்பெரிய வெற்றியென இராணுவம் புளகாங்கிதம்!

Pagetamil

இன்று முதல் QR முறை: முகக்கவசமும் முக்கியம்!

Pagetamil

இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை: திருச்சியில் இராதாகிருஷ்ணன் எம்.பி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!