27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

இயற்கை அனர்த்தம்: 3 பேர் பலி; 3 பேர் மாயம்!

கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 7,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை அனர்த்தங்களினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,766 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தனது சமீபத்திய நிலைமை அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 528 குடும்பங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் 57 குடும்பங்களும் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொல்பிட்டிய, நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 5 வயது குழந்தை உட்பட குறைந்தது ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பொல்பிட்டிய, ஹிதினேகம பிரதேசத்தில் நேற்று முன்பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணும் (62) மற்றும் 5 வயது குழந்தையும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பொலிசார் மற்றும் உள்ளூர்வாசிகள் நடத்திய தேடுதலின் போது இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை நாவலப்பிட்டி அக்கரவத்தை பகுதியில் கடம்புலவ ஓயாவை கடக்க சென்ற இரு ஆண்களும் பெண் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்கள் 36, 46 மற்றும் 47 வயதுடைய கட்டபுல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, மேலும் மூவருடன் சென்ற நபர் ஒருவர் பன்மூர் ஏரியில் தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் ஹட்டனைச் சேர்ந்த 24 வயதுடையவர்.

அப்போது காணாமல் போன நபருடன் வந்த மற்ற இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

இதேவேளை, தென்மேற்கு பருவக்காற்று வலுவடைவதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், நாட்டின் தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய, மேற்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்க்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

Leave a Comment