டுபாயிலிருந்து 3 கிலோ கிராம் தங்கம் மற்றும் 39 ஐபோன்களை தம்முடன் எடுத்து வந்த 6 பேர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை டுபாயிலிருந்து வந்த ஆறு நபர்களும், சுங்கத்துறையினூடாகச் சென்ற போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்கள் ஒரு தொகுதி தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர். எஞ்சியவற்றை ஐபோன்களுடன் மறைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் அக்குறணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 – 51 வயதுடையவர்கள்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1