29.5 C
Jaffna
March 28, 2024
சினிமா

படப்பிடிப்பில் நடிகை சம்யுக்தா காயம்!

சண்டைகாட்சிப் படப்பிடிப்பின் போது நடிகை சம்யுக்தா ஹெக்டே காயமடைந்துள்ளார்.

கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில்  நடைபெற்றது.

அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்தார். அந்த சமயத்தில் அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் தன்னை சில நாட்கள் ஓய்வெடுக்க கூறியதாக சம்யுக்தா சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கிரீம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment