பாகிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மென்டிஸின் வேட்டையில் பாகிஸ்தான் அணி 231 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
இலங்கை முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 360/8 ஓட்டங்களையும் பெற்றது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 231 ஓட்டங்களை பெற்றது. நேற்று 4வது நாளில் 508 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆட ஆரம்பித்தது.
நேற்று ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களிற்கு ஓரளவு கைகொடுத்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் ஓரளவு சிறப்பான அடித்தளம் இட்டனர். நேற்றைய நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை பாகிஸ்தான் எடுத்தது.
இன்று மதிய போசனத்திற்கு சுமார் 30 நிமிடங்களின் முன்னர் ஆடுகளத்தில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களில் பந்துகள் அபாயரமான திருப்பங்களை ஏற்படுத்தியது.
இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் பிரபாத் ஜெயசூர்ய, ரமேஷ் மென்டிஸ் கூட்டணி இடைவிடாமல் பந்துவீசி, பாகிஸ்தானின் இறுதி 7 விக்கெட்டுக்களையும் 85 ஓட்டங்களிற்குள் சுருட்டினர். பாகிஸ்தான் 231 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
பாபர் அதிகபட்சமாக 146 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார், இமாம் உல் ஹக் 49, ஓட்டங்கள்.
பிரபாத் ஜெயசூர்யா 117 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்கள். ரமேஷ் மெண்டிஸ் 101ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்கள்.
ஆட்டநாயகன் தனஞ்ஜய டி சில்வா.
தொடர் நாயகன் பிரபாத் ஜெயசூர்யா. இரண்டு டெஸ்ட்களில் 17 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.