சமூக ஆர்வலர் பதும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் பத்தரமுல்ல பொல்துவnஇடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இன்று (28) மதியம் 12.30 அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தல்துவ குறிப்பிட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இன்று விசாரணைக்காக அங்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவினரை திருப்தியடைய செய்ய, போராட்டக்காரர்கள் மீது அராஜகத்தை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1