கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை, தரையில் விழுந்து விடாமல் ஒருவர் கையில் ஏந்திக் கொள்ளும் சிலிர்க்க வைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிழக்கு சீனாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லிஜியன் ஜாவோ, “நம்மிடையே ஹீரோக்கள்” என்று வீடியோவைப் ருவிற்றரில் பகிர்ந்துள்ளார்.
ஷென் டோங் என அடையாளம் காணப்பட்ட நபர், குழந்தையை காப்பாற்றியதன் மூலம் ஹீரோ ஆகியுள்ளார்.
ஆரம்பத்தில் கட்டிடத்திலிருந்து பலத்த இடி சத்தம் கேட்டுள்ளது. இரண்டு வயது சிறுமி தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து கட்டிடத்தின் எஃகு கூரையின் மீது விழுந்ததால் இது ஏற்பட்டது என்பதை அவர் உணர்ந்தார்.
தொலைபேசியில் பேசியபடி சென்ற ஷென் டோங், சிறுமி அங்கிருந்து நழுவி, தரையில் விழுவதைப் பார்த்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டே குழந்தையை காப்பாற்ற ஓடிச் சென்றார். பக்கத்தில் ஒரு பெண்ணும் ஓடினார். குழந்தை விழுந்த போது, ஷென் தனது தொலைபேசியை எறிந்துவிட்டு, கைகளை மேல்நோக்கி நீட்டி, அந்தச் சிறுமி நடைபாதையில் விழுவதற்கு முன் கைகளில் ஏந்திக் கொண்டார்.
சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது அவள் நிலையாக இருக்கிறார்.
Heroes among us. pic.twitter.com/PumEDocVvC
— Lijian Zhao 赵立坚 (@zlj517) July 22, 2022