24.7 C
Jaffna
February 4, 2023
இலங்கை

குத்திப் பார்த்தவர் கையை இழந்தார்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் ஊழியர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஒருவர் நேற்று (22) மதியம் உணவு அருந்திவிட்டு கை கழுவும் போது நிலத்தில் பொருள் ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

அதனை எடுத்து நிலத்தில் குத்திப் பார்த்தபோது வெடித்து சிதறியுள்ளது. இதன்போது குறித்த நபரின் கை சிதறி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடி!

Pagetamil

மனைவிக்கு இதய நோய்… இலங்கையில் மருந்துத் தட்டுப்பாடு; படகில் தமிழகம் அழைத்துச் சென்ற கணவன்!

Pagetamil

வீதியோரம் குப்பை வீச எதிர்ப்பு தெரிவித்தவரை காரில் 1KM தூரம் இழுத்துச் சென்றவர் கைது!

Pagetamil

இன்று மதுபானச்சாலைகள் மூடப்படும்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!