இரத்தினபுரி -ஹப்புகஸ்தென்ன பொலிஸ் பகுதியிலுள்ள தோட்டமொன்றில், தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த தமிழக அரசாங்கத்தின் நிவாரண அரிசி 350 KG (35 மூடைகள்) காணவில்லையென தோட்ட நிர்வாகத்தினால் பொலிஸில் முறைப்பாடு செய்யபட்டது.
இதனையடுத்து, தோட்ட தொழிற்சாலையில் கடமைப்புரியும் பெரும்பான்மையின அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதையடுத்து, 50 கிலோ கிராம் அரிசி மீட்கப்பட்ட போதிலும் மிகுதி அரிசி இதுவரை மீட்கப்படவில்லை.
சந்தேகநபர் கடந்த 5 ஆம் திகதி இரத்தினபுரி மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரால் திருடப்பட்ட அரிசி, இதுவரை மீட்கப்படாத காரணத்தினால் இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ். ராஜமணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.